Sunday, January 8, 2017

தூக்கம் நன்றாக வர - Cure Sleeplessness



Learn How to Outsmart Insomnia! CLICK HERE!
#insomnia #insomniaremedies #sleeplessness


தூக்கம் நன்றாக வர - Cure Sleeplessness , is a small video on தூக்கம் நன்றாக வர - Cure Sleeplessness ness. It gives various reasons and causes for sleeplessness. It also clearly explains the methods and measures to overcome sleeplessness easily.

For More Subscribe
For Ayurveda Videos
For Tamil Recipes & Cooking
For Simple Healthy Recipes
For Home Remedies
For Diabetic Patients
For Health & Health Recipes in English

To Read this video article:


தூக்கமின்மையை போக்கலாம்
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு குறைந்த படசம் 6 மணி முதல் 8 மணி வரை தூக்கம் கொள்வது அவசியமாகும். ஆனால், மக்கள் தொகையில் 35 முதல் 50 சதவீதம் நபர்களுக்கு தூக்கமின்மை மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. இவர்களில் 10 முதல் 15 சதவீதம் நபர்கள் தொடர்ந்து தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள்.
தூக்கமின்மைக்குரிய காரணங்கள்:
பகல் தூக்கம், நேரம் கெட்ட வேளைகளில் தூங்குவது, தாறுமாறான நேரத்தில் விழிப்பது, குறட்டை விடுதல், குடும்ப மற்றும் பணி செய்யும் இடங்களில் பிரச்சனைகள், மன அழுத்தம், தீவிரமான வலி, வேதனையுடன் உடல் நோய், சுற்றுப்புறச் சூழல் (அதிக சப்தம் உள்ள காற்றோட்டமற்ற இடங்களில் வசித்தல்)
அறிகுறிகள்:
இரவு நீண்ட நேரம் கழித்துத் தூங்கச் செல்லுதல், இரவில் படுக்கையில் படுத்தவுடன் தூங்குவதற்கு நீண்ட நேரம் ஆவது, மிகவும் அதிகாலையில் எழுந்திருத்தல், மீண்டும் தூக்கம் வராத நிலை, காலையில் எழுந்தவுடன் தலைவலி, டல் ஆக இருக்கும் உணர்வு, தூக்கம் வராததால் எரிச்சல் ஏற்படுதல், இரவில் திடீரென விழித்தல், மீண்டும் தூக்கம் வராமல் கஷ்டப்படுதல், குறட்டையின் காரணமாக விழிப்பு ஏற்பட்டு தூக்கம் கெடுதல், வாகனத்தை ஓட்டும் போது தூக்க உணர்வு ஏற்படுதல் போன்றவைகளை உணர்ந்தால் ஒருவருக்கு தூக்கமின்மை நோய் உள்ளது என அறிந்து கொள்ளலாம்.
தேவைக்கு மீறி தூக்க மாத்திரை சாப்பிடுவதும், மன அழுத்தம் காரணமாகவும் ஒருவர் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிறார். உடலில் தீராத வலி, இதயக் கோளாறுகள், நாள்பட்ட நுரையீரல் நோய்கள், கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை வியாதி, பக்க வாதம், ஞாபக மறதித் தன்மை, குறட்டை, பகலில் நீண்ட நேரம் தூங்குவது, உயர் இரத்த அழுத்தத்திற்கு பயன்படுத்தும் மாத்திரைகளால் தூக்கமின்மை ஏற்படலாம்.
குணப்படுத்த வழி
• இரவில் குறைவாக சாப்பிட வேண்டும். அதுவும் எளிதில் ஜீரணமாகும் உணவாக இருக்க வேண்டும். தூங்கச் செல்லும் செல்வதற்கு முன்பு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்பு சாப்பிட்டுவிட வேண்டும்.
• இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு டீ, காபி அருந்துவதை தவிர்க்கவும்.
• தினமும் இரவில் 9 மணிக்குள் தூங்கச் செல்வதை பழக்கமாக்கி கொள்ளுங்கள். அதேபோல், காலையில் குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து விட வேண்டிய பழக்கத்தையும் கடைபிடிக்கவும். இதன் மூலம் நேரம் கெட்ட வேளைகளில் தூங்குவதைத் தவிர்க்கலாம்.
• படுக்கும் படுக்கை அறை காற்றோட்டம் உள்ளதாக அமைதியாக இருக்க வேண்டும்.
• முதுகுக்கு சிக்கல் தராத படுக்கை நல்லது.
• படுக்கையில் இருள் சூழ்ந்த தன்மையில் மெல்லிய இசையை அல்லது நீங்கள் விரும்பும் பாடல்களை ரசித்துக் கொண்டு கண்களை, உடலை தளர்வாக வைத்திருக்க தூக்கம் உறுதியாக தாலாட்டும்.
• மசாஜ், தியானம், பாட்டுக் கேட்டல் போன்றவை மனதை ரிலாக்ஸ் செய்யும். இதன் விளைவு தூக்கம் எளிதில் அமையும்.
• பகல் நேரத்தில் தூக்கம் வேண்டாம்.
• சுறுசுறுப்பாக இருப்பதுடன் காலை வேளையில் நடைபயிற்சி மற்றும் சிறிது எளிதான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதனால் இரவில் நன்றாக தூக்கம் வரும்.
• தூக்கத்தை வரவழைக்கிறேன் பேர்வழி என்று ஒரு சிலர் மது அருந்துவதுண்டு. ஆனால், தூக்கத்துக்கு மது ஒரு தடையாகும். காலையில் எழுந்தவுடன் தலைவலி ஏற்படலாம் மற்றும் புத்துணர்வு இன்றி அமையச் செய்யும்.

More at http://myhealthguide.website/

No comments:

Post a Comment